SRI VYĀSA-PŪJĀ – 2023 – ஸ்ரீ வியாஸ பூஜா – 2023

SRI VYĀSA-PŪJĀ – 2023 – ஸ்ரீ வியாஸ பூஜா – 2023

SRI VYĀSA-PŪJĀ – 2023
(HH. Jayapataka Swami Guru Maharaj’s 74th Vyasa Puja Celebration)

Date: 1st April 2023 Saturday.
Venue: ISKCON, Srirangam

04:30 am – Mangala Aarti, Continued by Tulasi Aarti and Nrisimha Puja
05:15 am – Chanting Session
07:30 am – Dharsan Aarti & Guru Puja
08.15 am – SB Class By Guru Maharaj
09:30 am – Glorification By devotees
11:30 am – Vyasa-puja Address By Guru Maharaj
12:00 pm – Bhoga Offering Followed By Bathing of the Lotus Feet, Pushpanjali, Maha Arti.
01:30 pm – Mahaprasadam

Grab the special opportunity to please Guru & Krishna by Sponsoring the Lunch MahaPrasadam.

Fasting till noon.

ஸ்ரீ வியாஸ பூஜா – 2023
(தவத்திரு. ஜெயபதக சுவாமி குரு மஹராஜின் 74வது வியாச பூஜை கொண்டாட்டம்)

நாள்: 1 ஏப்ரல் 2023 சனிக்கிழமை.
இடம்: இஸ்கான், ஸ்ரீரங்கம்

காலை 04:30 – மங்கள ஆரத்தி தொடர்ந்து நிருசிம்ம பூஜை மற்றும் துளசி ஆரத்தி

காலை 05:15 – ஹரிநாம ஜெப உச்சாடனம்

காலை 07:30 – தர்சன் ஆரத்தி & குரு பூஜை

காலை 08.15 – குரு மகராஜ் நேரலை ஸ்ரீமத் பாகவத வகுப்பு

காலை 09:30 – குருமஹராஜ் மகிமை

காலை 11:30 – குரு மகராஜ் அவர்களின் வியாச-பூஜை உரை

மதியம் 12:00 – போக ஆரத்தியை தொடர்ந்து பாத பூஜை, புஷ்பாஞ்சலி, மஹா ஆர்த்தி.

மதியம் 01:30 – மகாபிரசாதம்

மதிய உணவு மஹா பிரசாதத்தை வழங்குவதன் மூலம் குருவையும் கிருஷ்ணரையும் பிரியப்படுத்தும் சிறப்பு வாய்ப்பைப் பெறுங்கள்

மதியம் வரை உண்ணாவிரதம்.

https://www.youtube.com/@ISKCONSrirangam/live

Letter from Guru Maharaj

Letter from Guru Maharaj

ஹரே கிருஷ்ணா! அன்பான பக்தர்களே, அனைவருக்கும் எனது பணிவான பிரணாமங்கள்!! 🙏🙇‍♂️

“`எல்லா புகழும் ஸ்ரீ ஸ்ரீ குரு மற்றும் கௌரங்காவுக்கு உரித்தாகுக!!, எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதாவுக்கு உரித்தாகுக!!“`

ஸ்ரீரங்கத்தில் பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு பக்தி தொண்டு செய்வது என்று தனது கடிதத்தில் தவத்திரு. ஜெயபதாக ஸ்வாமி குரு மகராஜ் குறிப்பிட்டவை பின்வருமாறு.

ஸ்ரீல பிரபுபாதா மற்றும் பகவான் சைதன்யரின் மகிழ்ச்சிக்காக, நமது குருமஹாராஜ் கனிவுடன் நம் கோவிலுக்கான தீர்க்க தரிசனத்தையும் அதற்கான சேவையும் பின்வருமாறு வழங்கியுள்ளார்.

_*அனைத்து பக்தர்களும் தங்கள் திறமைகளை பகவான் கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்துங்கள்.*_

_*ஒவ்வொரு பக்தரும் உற்சாகமாக கிருஷ்ணருக்குச் சேவை செய்ய வேண்டும், மேலும் எந்தவிதமான தாமஸ(அறியாமை) மற்றும் அபராதமான கூற்றுக்களை அல்லது செயல்கள் புரிவதை நாங்கள் விரும்பவில்லை.*_ நாம் எப்படி நினைக்கிறோம், பேசுகிறோம், செயல்படுகிறோம் என்பதைப் தெரிந்துகொள்ள உங்களையே நீங்கள் கண்காணியுங்கள். அது கிருஷ்ணர் மற்றும் அவரது பக்தர்களின் மகிமை பற்றி மட்டுமே இருக்க வேண்டும்.

_*ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் நம் கோவில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, ஸ்ரீ ஸ்ரீ ஜெகந்நாத பலதேவ சுபத்திரா மாயி திரு விக்கிரஹங்களின் சேவையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, என்னால் மிகவும் பாராட்டப்படும்.*_ இங்கு நமது குருதேவர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் மகிழ்ச்சியுறும் வண்ணம் நம் வாழ்வு மற்றும் திருக்கோவில் திட்டங்கள் வெற்றிபெற நாம் பகவான் ஜெகந்நாதரின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

_*நாம் அனைவரும் இணைந்து சேவைபுரிவதன் மூலம் நாம் ஸ்ரீல பிரபுபாதரின் மீது வைத்துள்ள அன்பை வெளி காட்ட முடியும் என்று பிரபுபாதா கூறியுள்ளார்.*_ சுயநலமிக்க, தன் பெயர் புகழ் மகிமைக்கான ஆசை, தனிப்பட்ட ஆசை மற்றும் வெறுப்பு ஆகியவை நம் ஒற்றுமையின் சக்தியை அழிக்கும்.

_*ஸ்ரீரங்கம் இஸ்கானில் பிரிவினை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.*_ ஸ்ரீல பிரபுபாதரின் குறிக்கோளுக்கு சேவைசெய்வதில் மட்டுமே ஆர்வமுடன் இருங்கள்.

_*ஸ்ரீல பிரபுபாதா அவர் இயற்றிய புத்தகங்களை கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள அனைத்து பக்தர்களும் முறையுடன் படித்து, பக்தி சாஸ்திரி, பக்தி வைபவா, பக்தி வேதாந்தா பட்டங்களை பெற வேண்டும் என விரும்பினார்.*_ இங்கே நமது SIHE ஸ்ரீரங்கம் உயர் கல்வி நிறுவனத்தைக் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருந்தும்.

_*நம்மால் இஸ்கான் ஸ்ரீரங்கத்தை தென்னிந்தியாவிலேயே ஒரு சிறப்பான மையமாக்க முடியும்*_ குறிப்பாக இங்கே குருமஹாராஜ் நம்முடன் இருப்பதை உணர்த்துகிறார்.

_*மேலும் இம்முயற்சியில் எவரேனும் தங்களால் இயன்ற பங்களிப்பு, சேவை, மற்றும் எவ்வித உதவியையும் அளிப்பவரை நாம் வரவேற்கவும் பாராட்டவும் வேண்டும்.*_ நம் இஸ்கான் ஸ்ரீரங்கம் கோவிலின் மகிமைமிக்க திட்டங்களில் ஆர்வமுள்ள பக்தர் எவராயினும் எங்கிருந்தாலும் நம்மால் வரவேற்கப்பட வேண்டும்.

_*நாம் ஸ்ரீல பிரபுபாதாவின் கனவு மற்றும் பகவான் சைதன்யரின் ஆணையை பூர்த்தி செய்ய விரும்புகிறோம்.*_

_*பகவான் சைதன்யர் தனது தென்னிந்த்திய பயணத்தில் 4 மாதம் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்தார்*_ ஸ்ரீரங்கமே அவர் நபத்வீப் மற்றும் ஜகன்னாத் பூரிக்கு வெளியே நீண்ட காலம் வீற்றிருந்த ஸ்தலமாகும்.

_*நம் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரான கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் இருந்து நமக்கு கிட்டியுள்ளார்.*_ இங்கே குருமஹாராஜர் ஸ்ரீரங்கத்தில் விருந்தவனத்தை உருவாக்குங்கள் என்றே நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

_*ஸ்ரீரங்கம் நமக்கு ஒரு சிறப்பான இடமாகும்*_ நம் குரு மஹாராஜருக்கும், கௌடிய வைஷ்ணவர்களுக்கும் ஸ்ரீரங்கம் சிறப்பான இடம் என்றால் நம் அனைவருக்கும் அவ்வண்ணமே.

_*ஸ்ரீ ரங்கநாதர் பழமையானவர் என்பதையும் மேலும் பகவான் சைதன்யரை பின்பற்றுபவர்களுக்கு சிறப்பான தனித்துவம் உரியவராயும் உள்ளார்.*_ இந்த ஜடவுலகிற்கு வந்த முதல் தெய்வம்!

_*அதனால் ஸ்ரீரங்கத்தில் பலரையும் தங்களை பகவான் கிருஷ்ணருக்கு அர்பணிப்பவர்களாக ஆக்க வேண்டும்.*_ நாம் ஸ்ரீரங்கத்தில் அற்புதமான ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று கூறி இங்கே மீண்டும் ஒரு முறை தானும் நம்முடன் இருப்பதை உணர்த்துகிறார்.

உங்கள் சேவகன்,

_நந்தபுத்ர தாஸா_

Sri Nityananda Trayodasi 2023 – ISKCON Srirangam

Sri Nityananda Trayodasi 2023 – ISKCON Srirangam

ஹரே கிருஷ்ணா!
அன்பான பக்தர்களே,

ஸ்ரீ நித்யானந்த திரயோதசி விழா பிப்ரவரி 3, 2023 அன்று கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இது எங்கள் தனிப்பட்ட அழைப்பாக கருதுங்கள். இஸ்கான் ஸ்ரீரங்கத்தில் நாங்கள், இந்த நல்ல சந்தர்ப்பத்தில் உங்கள் அன்பான வருகையைக் கோருகிறோம்.

அதிகாலை:
4:30 மங்கள ஆரத்தி
5:00 துளசி பூஜை
7:30 தரிசன ஆரத்தி
8:00 ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு
காலை:
09:00 – 12:00 ஹரி நாம கீர்த்தனை
11:00 அபிஷேகம்

நண்பகல்:
12:00 வகுப்பு
01:30 மகா ஆரத்தி
02:00 மகா பிரசாதம் விருந்து
02:30 நன்கொடை வழங்கும் நேரம்
02:30 இஷ்ட கோஸ்டி

குறிப்பு:
இத்திருநாளில் சேவைக்கான பொறுப்பேற்றவர்கள் உரிய சமயத்தில் பங்கேற்கவும்.

இறைவனுக்கு 108 போக பொருட்களை வழங்குவதன் மூலம் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையைப் பெற இது ஒரு அறிய வாய்ப்பாகும், பகவான் நித்யானந்த பிரபுவுக்கு சமைக்கத் திட்டமிடுபவர்கள் பின்வரும் செய்தியை கவனமாகப் படியுங்கள்..

நன்றி,
ஹரே கிருஷ்ணா!

உங்கள் சேவகன்
நந்த புத்ர தாஸா
+919677316628

Hare Krishna,
Dear Devotees,

You are cordially invited to attend
Sri Nityananda Trayodasi Festival on 3rd February 2023.

Please treat this as our personal invitation for you and your family.
We, at ISKCON SRIRANGAM solicit your gracious presence on this auspicious occasion

It is also a chance to reap the mercy of Lord Nityananda Prabhu by offering 108 Bhoga Items to Lordships, so please be a part of it.

04:30 AM Mangala Arati
05:00 AM Tulasi Puja
07:30 AM Darshan Arati
08:00 AM Srimad Bhagavatam Class

09:00 AM – 12:00 PM Kirtan

11:00 AM Abhisekham
12:00 PM Class
01:30 PM Maha Arati
02:00 PM Maha Prasadam Feast
02:30 PM Donations Collections
02:30 PM Ishta Gosti

Your Servant,
Nandaputra Dasa

Radhashtami

Radhashtami

Radhashtami is celebrated on the eighth day of the bright fortnight (shukla paksha ashtami) in the month of Bhadra (August – September). It is a very significant festival for the devotees. Radharani is the mother of the entire universe and on this auspicious day devotees pray to Her to bless them with Krishna-bhakti.On this auspicious occasion the Deities of Sri Radha Govinda are adorned with a new dress.

img

The altar is decorated with brilliant, colourful flowers which spread their fragrance everywhere.In the evening, the utsava Deities of Sri Radha Govinda receive a splendid abhisheka. Devotees perform kirtanas and glorify Srimati Radharani by singing wonderful songs composed by Vaishnava Acharyas. The Deities are bathed with milk, curd, ghee, honey and jaggery water followed by juices from varieties of fruits like muskmelon, apple, watermelon, pineapple, pomegranate, orange, sweet lime, papaya, grapes, etc.

Hundreds of devotees visit the temple to witness the celebrations. An elaborate arati is performed as the devotees sing Sri Radhikastava. This is followed by the showering of different varieties of flowers. After the abhisheka, chappan bhog (56 varieties of delicacies prepared by devotees) is offered to Sri Radha Govinda. There is a discussion on the pastimes of Srimati Radharani followed by a feast prasadam for all.